திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு குறித்து அரசு மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன் கூறியுள்ளதாவது, கொரோனா பாதிப்பு தற்போது இல்லை. […]
