மருத்துவமனையில் மூட்டை மூட்டையாக குப்பைகளை சேகரித்து வைத்திருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அங்கு 300-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மருத்துவமனையின் கழிப்பிடம் முன்பு மூட்டை, மூட்டையாக குப்பைகளை குவித்து வைத்துள்ளனர். மேலும் கழிவு நீரும், மழை நீரும் மூட்டைகளுக்கு […]
