கொரோனா சிகிச்சை பணிக்கு 2,834 மருத்துவப் பணியாளர்களை பணியமர்த்த முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34,914 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்தம் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் […]
