திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியிருந்தார். அதன்படி தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. […]
