முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடகுடி கிராமத்தில் முதியவர் தங்கராஜ் வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களாக தங்கராஜ் மனமுடைந்து இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தங்கராஜ் தன் மகள் மாரியம்மாளை பார்க்க மருதுவஞ்சேரி சென்றார். இதனையடுத்து ஒத்தங்கரை ஆற்றங்கரை ஓரம் உள்ள ஒரு மரத்தில் முதியவர் தங்கராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த […]
