ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 49-வது நாளாக போர் புரிந்து வருகிறது. இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கானோர் ரஷ்யப் படைகளால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தென்கொரிய பாராளுமன்றத்தில் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் உக்ரைனின் மரியுபோல் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தென்கொரியா உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்க முன்வர […]
