பிரபல டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா கர்ப்பமாகவுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் வருடம் முதல் பிரிட்டிஷ் தொழில் அதிபர் அலெக்சாண்டர் கில்க்ஸ் என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து சென்ற 2020ஆம் வருடம் டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயம் செய்தனர். அதே வருடத்தில் ஷரபோவா டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் தன் 35-வது பிறந்தநாளை கொண்டாடிய மரியாஷரபோவா […]
