கொடைக்கானல் பாதரசஆலை வளாகத்தில் வெட்டப்பட்ட 1 மரத்திற்கு பதில் 10 மரங்களை நடவேண்டுமென தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொடைக்கானில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவன பாதரசஆலை நிர்வாகம் பாதரச கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் கொடைக்கானல் வனவிலங்கு சரணாலாயத்தை ஒட்டி உள்ள ஆலை வளாகத்தில் அனுமதி இன்றி மரங்களை வெட்டியதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியது. அதன்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இது குறித்து மத்திய மாநில […]
