மரம் முறிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் மர வியாபாரியான ஹனிப் பாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டையூர் கிராமத்தில் தொழிலாளர்களுடன் சென்று மரங்களை வெட்டிக் கொண்டிருந்தார். இவர்களுடன் டெம்போ ஓட்டுநரான ஹரிஷ் என்பவரும் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் தொழிலாளர்கள் மரத்தை வெட்டிய போது எதிர்பாராதவிதமாக மரம் முறிந்து ஹரிஷ் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த ஹரிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
