மரம் முறிந்து விழுந்து 4 மின் கம்பங்கள் சேதம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமாரகோவிலில் வேளிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு செல்லும் வழியில் பிரம்மபுரத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென ஆலமரத்தின் ஒரு பெரிய கிளை முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக காரில் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த கேரளா குடும்பத்தினரும், நடந்து சென்று கொண்டிருந்த சில பேரும் அதிர்ஷ்டவசமாக […]
