கட்டுப்பாட்டை இழந்த லாரி மரம் மீது மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடி பகுதியில் லாரி ஒன்று சிமெண்ட் மூட்டைகளை இறக்கிவிட்டு கர்நாடக மாநிலம் கொள்ளேகால் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கும்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் லாரி டிரைவரான சுரேஷ், கிளீனரான சக்திவேல் ஆகிய இருவரும் அதிர்ஷ்டவசமாக விபத்திலிருந்து உயிர் […]
