மரங்களை கடத்த முயற்சி செய்த மர்ம நபர்களை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே மானூர் கிராமத்தில் மரங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி உதவி வன அலுவலர் சர்மிலி, வனவர் ஆனந்த், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 2 சில்வர் ஓக் மரங்களும், 4 பூ மரங்களும் வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. அந்த மரங்களை […]
