திமுக ஆட்சியில் தொன்மையான தமிழர் மரபுகள் மற்றும் மென்மையான தமிழிலக்கிய மரபுகளும் சிதைக்கப்படுகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் திமுக தொடர்ந்து தமிழர்களின் மரபுகள், மாண்புகள் மற்றும் மதிக்கத்தக்க புராதன நினைவுச் சின்னங்களை வேரோடு அழிப்பதே தான் வேலையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் தமிழ்ப்பாட நூலில், அவ்வையார் அகர வரிசைப்படி அருளிச்செய்த கொன்றைவேந்தன் பாடல்கள் அச்சிடப்பட்டுள்ளது. அதனைப் போலவே அனைத்து நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. தமிழ் பாட நூலில் ஆலயம் தொழுவது சாலவும் நன்று […]
