அரசு பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலிருந்து ராஜபாளையத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் விளக்கு பகுதிக்கு வந்தபோது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையின் அருகே இருந்த ஒரு மரத்தில் பேருந்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த பேருந்தை முனியசாமி என்பவர் ஓட்டி வந்தார். இப்பேருந்தில் மொத்தம் […]
