நாவல் பழம் பறித்த காவலாளி மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வள்ளலார் பிள்ளையார் கோவில் தெருவில் ரகுநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மீனா என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ரகுநாதன் வள்ளலார் டபுள்ரோட்டின் நடுவே உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழங்கள் பறித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக மரக்கிளை […]
