மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தடியம்பட்டி பகுதியில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செந்தூரப் பிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு மதுபாலா என்ற மகளும், சூரிய பிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 29 – ஆம் தேதியன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதியில் செல்லத்துரை குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். […]
