ஹபீஸ் சயீத்தின் லாகூர் இல்லத்திற்கு வெளியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மும்பை தாக்குதலில் மூளையாக இயங்கிய ஹபீஸ் சயீத்தின் லாகூர் வீட்டிற்கு வெளியில் கடந்த வருடம், ஜூன் மாதம் 23 ஆம் தேதி அன்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் மூவர் உயிரிழந்தனர். மேலும், 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பல கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தடை […]
