விராலி மலையில் உள்ள தைல மரக்காட்டில் தீ பிடித்தது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா சமத்துவபுரம் அருகில் ஆம்பூர்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான தைல மரக்காடு ஒன்று இருக்கிறது. இந்த தைல மரக்காட்டில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பதறி போன ஆறுமுகம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி […]
