மதுரையில் மரக்கரி உற்பத்தியாளர் கொலை வழக்கில் மனைவி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பெரியசாமி என்பவர் அவரது மனைவி சாந்தியுடன் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் மரக்கரி உற்பத்தி செய்யும் தொழிலை மேற்கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் அத்தோட்டத்தில் இரவில் முயல் வேட்டையிலும் ஈடுபடுவார். இந்நிலையில் பெரியசாமி அவரது தோட்டத்திற்கு அருகே இருக்கும் மற்றொரு தோட்டத்தினுள் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த […]
