மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் விவசாயத்தை மட்டுமே முதன்மை தொழிலாக கொண்டுள்ளது. ஒட்டுமொத்த காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைமடை பகுதியாக விளங்கும் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணைக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட்டாலும், கடந்த பல வருடமாகவே கடைப்படை பகுதி வரை முழுமையாக தண்ணீர் சென்றடையவில்லை என்று விவசாயிகள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். இந்த ஆண்டும் மேட்டூர் அணை […]
