காதல் மனைவியை திருமண நாளில் கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காமராஜர் சாலை அக்பர் காலனியை சேர்ந்த அருள் என்பவர் பேருந்து நிலையத்தில் புத்தகம் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்து வருகின்றார். இவருடைய மனைவி ரேவதி. இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஸ்டீபன் ராஜ் என்ற மகனும் மகாரித்திகா என்ற மகளும் இருக்கின்றார்கள். மகன் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீரியாக பணியாற்றி வருகின்றார். மேலும் […]
