மயிலாடுதுறை நகரில் போக்குவரத்து நெரிசல் காரணமாக கடந்த 25 வருடங்களாக இரண்டு பேருந்து நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் கும்பகோணம், பூம்புகார், சிதம்பரம், சென்னை, மணல்மேடு போன்ற மார்க்கங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் காமராஜர் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த காமராஜர் பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று வரவும், பேருந்துகள் எளிதாக பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கும் சிரமம் […]
