புதுச்சேரி கருவடிக்குப்பம் மயானத்தில் கொரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்ய வந்தவர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கருவடிபத்தில் உள்ள மின் மையானம் மற்றும் சுடுகாட்டில் எரியூட்டபடுகிறது. உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் இரவு பகல் பாராமல் ஓய்வின்றி சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஆசிரியரின் உடலை தகனம் செய்ய கருவடிக்குப்பம் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது இறுதிச்சடங்கு செய்ய […]
