இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி முத்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு மயானத்துக்கு செல்வதற்கு பாதை வசதி இல்லை. இதனால் பாதை வசதி கேட்டு அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே மயானத்திற்கு […]
