மயானத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி உப்புக்கோட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் வீரபாண்டி காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை செய்துள்ளனர். அப்போது உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த அழகு மலை என்பவர் அப்பகுதியில் உள்ள மயானத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மயானத்திற்கு […]
