சாலை விரிவாக்க திட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மயானத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சப்-கலெக்டர் அலுவகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் மனுக்களை வழங்கியுள்ளனர். அப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தினர் மற்றும் கோலார்பட்டியை சேர்த்த பொதுமக்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கோலார்பட்டியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து […]
