சிறப்பாக நடைபெற்ற மயானக்கொல்லை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே மேல்சிருவள்ளூர் கிராமத்தில் புகழ்பெற்ற அங்காளி காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மயானக்கொல்லை திருவிழா கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், பஞ்சாமிர்தம், இளநீர் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் அம்மனுக்கு […]
