இளம் ஹீரோயின் போல் ஜொலித்து வரும் 44 வயதான நடிகை ஜோதிகா ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித், விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை திருமணம் செய்ததற்கு பின் சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் “36 வயதினிலே” என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். […]
