இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது ஓரளவுக்கு மனநிறைவு தருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் தடுப்பு மற்றும் இளவயது கர்ப்பம் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே, குண்டலபட்டி கிராமத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை ஆரம்பித்து […]
