இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி, சென்ற பொதுமுடக்கத்தை நான் பார்த்தேன். எனக்கு தெரியும் கிராமத்தில் எப்படி பட்டினிச்சாவு நிகழ்ந்தது என்று எனக்கு தெரியும். ரேஷன் கடை அரிசி இரண்டு நாட்கள் சாப்பிடலாம் அல்லது நான்கு நாள் சாப்பிடலாம் அல்லது பத்து நாள் சாப்பிடலாம். அதற்கு பிறகு சாப்பிட முடியாது பல பிரச்சினைகள் இருக்கிறது. மக்கள் வந்து குழந்தை சோற்றுக்காக எவ்வளவு ஏங்கினார்கள் என்று கிராமத்தில் தெரியும். கிராமங்களின் நிலை மிக மோசமாக மாறிவிடும். […]
