ஹவுத்தி போராளிகள், விமான தளத்தில் ட்ரோன் மூலமாக சவுதியின் மன்னர் காலித், தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருக்கிறது. தெற்கு சவுதியின் Khamis Mushait ல் இருக்கும் மன்னர் காலித், ராணுவ விமான தளத்தில் ட்ரோன் வைத்து தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி கூறியிருக்கிறது. ஆனால் சவுதி இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவில்லை. சவுதி மீது ஹவுத்தி போராளிகளின் தாக்குதல் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது. இதில் பல தாக்குதல்கள் தடுக்கப்பட்டுவிட்டது. எனினும் நாட்டின் தெற்கு பகுதியை ஏவுகணைகள் சில தாக்கியிருக்கிறது. […]
