அடிமையாக இருக்கும் வழக்கம், அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று என அமைச்சர் மனோ தங்கராஜ் அதிமுகவை விமர்சித்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றபட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப திமுக இரட்டை […]
