சசிகலா மற்றும் டிடிவி தினகரன் அதிமுகவிற்கு வர வேண்டும் என்பதை தொண்டர்களின் விருப்பம் என அதிமுகவின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவுமான மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார். விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251வது நினைவு நாளையொட்டி, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அதிமுகவின் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘செப்டம்பர் 1ஆம் தேதி பன்னீர்செல்வம் […]
