திருவள்ளூரில் ரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அந்த கல்லூரியை சேர்ந்த மனோஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பகுதியிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் படித்துவந்த முதலாமாண்டு மாணவர் குமாரை அக்கல்லூரியின் மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 29-ம் தேதி திருநின்றவூர் ரயில்வே நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் என்ற மாணவனை போலீசார் கைது […]
