தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆபாச படங்களை அனுப்பி மர்மநபர்கள் தொந்தரவு தருவதாக போலீசிடம் புகார் அளித்துள்ளார் நகுலின் மனைவி ஸ்ருதி. இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுலகிற்கு அறிமுகமானார் நகுல். இத்திரைப்படத்திற்கு பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது நகுல் பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார். நீண்ட காலமாக தனது தோழியாக இருந்த ஸ்ருதியை காதலித்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். […]
