பீகாரைச் சேர்ந்த பிருத்வி ராஜ் சிங், தன் மனைவியுடன் பெங்களூரில் வசித்து வந்திருக்கிறார். இருவருக்குள்ளும் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிருத்வி ராஜின் மனைவி அவருடன் உடலுறவுகொள்ள மறுப்பு தெரிவித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிருத்வி, தன் மனைவியை ஆகஸ்ட் 3-ம் தேதி காரில் அழைத்து சென்று பின்னர் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து கொலைசெய்துவிட்டு, ஷீரடி காட் பகுதியில் உடலை வீசிவிட்டுச் சென்றிருக்கிறார். பிறகு அவரே, தன் மனைவி காணாமல்போய்விட்டதாக போலீஸில் புகாரளித்திருக்கிறார். இதில் […]
