திருநெல்வேலி மாவட்ட பனங்குடியில் மைக்கல் மதன் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சினேகாவும் காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. சினேகா அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதால் அதனை கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு சென்று விடுவதாக கூறப்படுகிறது. அதன்படி […]
