மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள தோளூர் தெற்குபட்டி கிராமத்தில் தர்மர் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும் 5 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தர்மர் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அபிராமம் காவல்துறையினர் தர்மரை கைது செய்து […]
