கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்கோவில் தாந்தவிளை பகுதியில் வடிவேல் முருகன்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முருகனுக்கு சுஜா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வயிறு வலிக்காக தம்பதியினர் தக்கலையில் இருக்கும் மருந்து கடையிலிருந்து மருந்து வாங்கி வந்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு குடித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இறச்சகுளத்தில் இருக்கும் சுஜாவின் வீட்டிற்கு புதுமண தம்பதி சென்ற போது […]
