பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் பக்சிவாலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஜஸ்வீர் கவுர் என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தன்னுடைய கணவர் காலா சிங்கை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கவுர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் கவுரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. […]
