ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் சாய்பிரியா (24). இதில் சாய்பிரியாவுக்கும் அவருடைய உறவினரான சீனிவாஸ் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. சீனிவாஸ் ஐதராபாத்திலுள்ள ஒரு தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பு நான் கம்ப்யூட்டர் கோர்ஸ் படிக்க வேண்டும் என கணவனிடம் கூறிய சாய்பிரியா, விசாகப்பட்டினத்திற்கு வந்தார். அதன்பின் சீனிவாஸ் விசாகப்பட்டினம் வந்தடைந்தார். கடந்த திங்கள்கிழமையன்று 2 பேரும் விசாகப்பட்டினத்திலுள்ள கடற்கரைக்கு மாலை வேளையில் சென்றிருந்தனர். […]
