உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற மறுப்பு தெரிவித்த சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 15 வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த நபர் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பெயரில் அதே ஊரில் பழ தோட்டத்தின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்த ஹரிஸ் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். […]
