காதல் மனைவியை மீட்டுத் தரக்கோரி வாலிபர் காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் சதீஷ்சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் முத்தையாபுரம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நான் தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த சில வருடங்களாக நானும் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் நவ்சின்பானு என்பவரும் காதலித்து வந்தோம். அதற்கு நவ்சின்பானு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் நவம்பர் […]
