மனைவியை மிரட்டிய வங்கி மேலாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மணி நகர் பகுதியில் பிரவின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிளாரன்ஸ் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளாரன்ஸ் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து பிரவின்குமார் விவகாரத்து […]
