கள்ளக்காதலியுடன் இணைந்து மனைவியை கொன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தெரேசாபுரம் அருகில் கடந்த 18ஆம் தேதி அன்று 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் மூக்கில் ரத்தம் வந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண் காவேரிபாக்கம் பகுதியில் வசித்த நவீன் என்பவருடைய மனைவி பிரியா என்பது தெரியவந்துள்ளது. […]
