மனைவியை கத்தியால் குத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள மிளகரணை பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கீர்த்திகா(24) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அருண்குமார் கீர்த்திகாவை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த கீர்த்திகா தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அருண்குமாரை கைது செய்து […]
