குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தொழிலாளி கட்டையால் அடித்து மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சோழவித்தியாசபுரம் பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரசாத், சூர்யா ஆகிய 2 மகன்களும் கீதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கீதாவிற்கு வருகிற 28-ஆம் தேதி திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் ரேவதி, கார்த்தி இருவரும் தங்கள் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து விட்டு […]
