தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் உப்புக்கோட்டை பகுதியில் கலைச்செல்வன்(29) என்பவர் வசித்து வருகின்றார். தொழிலாளியான இவருக்கு காயத்ரி(28) என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் கலைச்செல்வனுக்கு மது பழக்கம் இருந்ததால் அடிக்கடி மது அருந்திவிட்டு காயத்திரியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் காயத்ரி கோபித்துக்கொண்டு தேவதானப்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கலைச்செல்வன் தனது மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக மாமனார் […]
