Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதை அமைக்க கூடாது…. நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும்…. எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்….!!

குலவிளக்கு கிராமத்தில் சாயப்பட்டறை அமைக்க கூடாது என்று பொதுமக்கள் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ. பிரேமலதாவிடம் குரங்கள் ஓடை பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் நடராஜ், செயலாளர் குமரவேல், நிர்வாகிகளுடன் வந்து குலவிளக்கு கிராம மக்கள் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது குலவிளக்கு கிராமம் முற்றிலும் விளைநிலம் கொண்ட பூமியாக இருக்கின்றது. அங்கு சிலர் விளைநிலத்தில் மின் இணைப்பு பெற்று சாயப்பட்டறை அமைக்க அனுமதி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணி” விவசாயிகளின் குற்றச்சாட்டு…. அதிகாரிகளின் ஆய்வு…!!

கல்லணைக்கால்வாயின் தரம் தொடர்பாக பொதுப்பணித்துறையின் உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கீழ்பவானி வாய்க்காலில் தரைதளம் கட்டப்பட்ட இடத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து சென்னை புளியந்தோப்பு பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்டப்பட்ட வீடுகள் தரம் இல்லை என்று 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானங்கள், நீர் ஆதார புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்ய பொதுப்பணித்துறையின் உயர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

முடங்கி இருக்கும் பணிகள்…. ஒன்றியக்குழு தலைவர் மீது குற்றச்சாட்டு…. கலெக்டரிடம் மனு….!!

ஏரியூர் ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் ஒன்றியக்குழு துணைத் தலைவர் தனபால் மற்றும் கவுன்சிலர்கள் கலெக்டர் திவ்யதரிசினியிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த புகார் மனுவில் ஏரியூர் ஒன்றியக்குழு தலைவர் பொறுப்பில் இருக்கும் பழனிச்சாமி என்பவர் துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களிடம் கலந்தாலோசிக்காமல் தனியாக செயல்பட்டு வருகிறார். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து அவர் பல்வேறு முறைகேடுகள் செய்து வருவாய் இழப்பை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த கடைகளை அடைக்கனும்…. இடையூறாக நிற்கும் வாகனங்கள்…. கலெக்டரிடம் மனு….!!

மதுக்கடைகளை அடைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், மக்கள் அதிகாரம் அமைப்பாளர் முரளி மற்றும் பெரும்பாலானோர் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் திருவாரூர் விளமல் பகுதியில் மன்னார்குடிக்கு செல்லும் சாலையில் 2 மதுபான கடைகள் இருக்கின்றது. இந்த பகுதியில் கலெக்டர் […]

Categories
மாநில செய்திகள்

குண்டாசை ரத்து செய்யக்கோரி… பப்ஜி மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு…!!!

டாக்ஸி மதன் 18+ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பப்ஜி கேமை நேரலையில் விளையாடி வந்தார் மதன். இந்த கேமில் அவருடன் சேர்ந்து ஆபாசமாக பேசிய பெண்ணின் குரல் அவரின் மனைவி என்பது தெரியவந்தது. இதையடுத்து  மனைவி கிருத்திகா உடன் அவரின் 8 மாத குழந்தையும் சிறையில் அடைக்கப்பட்டார். குழந்தையின் நலன் கருதி தாய் கிருத்திகாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. பிறகு தலைமறைவாக இருந்த மதனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் […]

Categories
மாநில செய்திகள்

கிராம சபை கூட்டம் நடத்த கோரி…. ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு….!!!!!

தமிழக சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டது. அதன்படி, கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்துள்ளார்.  அவருக்கு விமான நிலையத்தில் கட்சி தொண்டர்களும், ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரனை சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது… நிர்மலா சீதாராமனிடம் திருமாவளவன் மனு…!!!

வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று திருமாவளவன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் மனு அளித்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கல் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தனியார் மயமாகும் வங்கிகள் குறித்த பட்டியல் சமர்பிக்கப்பட்டது. அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதற்கு வந்து ஊழியர்கள் மற்றும் பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

3 மாதம் தரவில்லை…. உடனடியாக வழங்க வேண்டும்…. கலெக்டரிடம் மனு….!!

நிலுவையில் இருக்கின்ற ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று செவிலியர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில் செவிலியர்கள் தங்களுக்கு 3 மாதமாக நிலுவையில் இருக்கின்ற ஊதியத்தை உடனடியாக வழங்குவதற்கு கலெக்டர் உத்தரவுவிட கோரி மனு கொடுத்துள்ளனர். மேலும் செவிலியர்கள் பணி நீட்டிப்பு செய்து தருமாறும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

தோல்வியடைந்த இங்கிலாந்து.. விமர்சிக்கப்பட்ட வீரர்களுக்கு ஆதரவாக 6,50,000 மக்கள் கோரிக்கை..!!

யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து கோப்பையைத் தவற விட்டதால் அணியில் இருக்கும் கருப்பின வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இங்கிலாந்து வீரர்கள், Bukayo Sako, Marcus Rashford மற்றும் Jadon Sancho போன்றோர் பெனால்டி வாய்ப்பை உபயோகிக்க தவறியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். எனவே அவர்கள் கண் கலங்கி அழுத புகைப்படங்கள் வெளியாகின. மேலும் அமெரிக்காவின் தடகள வீராங்கனையான Gwen Berry என்ற கருப்பினத்தவர், “அவர்களுக்கு ஏதேனும் நன்மை நம்மால் உண்டானால் மட்டும் தான் கருப்பினத்தவர்களை பிடிக்கும்” என்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசு உத்தரவை மீறி செயல்படுது…. ரொம்ப சிரமமா இருக்கு…. தாசில்தாரிடம் கோரிக்கை மனு….!!

மதுபான கடையை அடைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையை அடைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ராஜபாளையம் தாசில்தார் ராமச்சந்திரனிடம், முன்னாள் எம்.பி.யும்., இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளருமான லிங்கம் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் சேத்தூர் பேருந்து நிலையம் அருகில் மதுபான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்களுக்கு வீடு வேனும்…. திரண்டு சென்ற மக்கள்…. விருதுநகரில் பரபரப்பு….

சமத்துவபுரத்தில் அருந்ததிய சமுதாய மக்கள் வீடு கேட்டு திரண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள முள்ளிசெவல் சமத்துவபுரத்தில் அருந்ததிய சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் தங்கள் வசிப்பதற்கு ஏற்ற வகையில் வீடு கேட்டு கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக திரண்டு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்” 900-க்கும் மேற்பட்ட மனு…. பங்கேற்ற அதிகாரிகள்….!!

ஆலங்குடி ஊராட்சி மன்றம் சார்பாக பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் ஊராட்சி மன்றம் சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவரான வக்கீல் மோகன் தலைமை தாங்கினார். மேலும் துணைத்தலைவர் ராசாத்தி சின்னப்பா முன்னிலையில், ஊராட்சி செயலாளர் குமரவேல் வரவேற்று பேசியுள்ளார். இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட மனுக்கள் வாங்கப்பட்டு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு வகைப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது…. எம்.எல்.ஏவின் தகவல்….!!

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பேரூராட்சியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் புகார்களையும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அலுவலகத்தை எஸ்.தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் அனுமதியை நீட்டிக்க கோரி… உச்சநீதிமன்றத்தில் மனு…!!!

ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்க அளித்த அனுமதியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பரவி வந்த இரண்டாம் அலை காரணமாக, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு அரசு தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டது. தமிழகத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை திறந்து, அதில் ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இது தமிழக அரசு கடந்த மே மாதம் முதல் வரும் ஜூலை 31-ஆம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்…. கலெக்டரின் தகவல்….!!

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்  அமர்குஷ்வாஹாவிடம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாநில துணைத் தலைவர் ம. சிட்டி பாபு தலைமையில், எஸ்.சி பிரிவு தலைவர் பிரபு, நரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கும் அரசு காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் மாவட்டத்தில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வருவாய் அலுவலர் அலுவலகம்” இழப்பீடு தொகை வழங்கக்கோரி…. விவசாயிகளின் கோரிக்கை….!!

சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை பணிக்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் மனு அளித்துள்ளனர். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் தலைமையில், விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்றைகொடுத்துள்ளனர். அந்த மனுவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை- பெங்களூரு விரைவு சாலை பணிகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சில இடங்களில் மிகக் குறைந்த அளவில் இழப்பீடு கொடுக்கப்படுகிறது என்றும் ஒரு சில இடங்களில் இன்னும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இங்கு திறக்க கூடாது…. திரண்டு சென்ற மக்கள்…. அதிகாரிகளின் உறுதி…!!

குடியிருப்பு அருகில் மதுபான கடைகள் திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் மதுபான கடை ஒன்று இருக்கின்றது. அந்த மதுபான கடையை காலி செய்யும்படி இடத்தின் உரிமையாளர் கேட்டதால் அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து காட்பாடி-குடியாத்தம்  ரோட்டில் பாண்டியன் நகர் போகும் வழியில் குடியிருப்புகள் பகுதியின் பக்கத்தில் மதுபான கடையை திறப்பதற்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் சங்கர் மீது தொடரப்பட்ட மனு தள்ளுபடி… உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

இயக்குனர் ஷங்கர் மீது லைகா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்து இருந்தது. அதில் இயக்குனர் சங்கர் இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு எந்த படத்தையும் இயக்க கூடாது எனவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஷங்கர் தரப்பு கருத்தை கேட்காமல் தடை விதிக்க முடியாது என தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிபதி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால ரொம்ப பாதிக்கப்பட்டோம்..! எங்களுக்கு அனுமதி குடுங்க… மாவட்ட ஆட்சியருக்கு பரபரப்பு மனு..!!

சிவகங்கை மாவட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் முடிதிருத்துவோர் சார்பில் மாவட்ட மருத்துவ சமுதாய பேரவை மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமையில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது, கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான உடற்பயிற்சி நிலையங்கள், பெரிய மால்கள், சலூன் கடைகள், அழகு நிலையங்களை முழுமையாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள் வைத்து நடத்தி வருபவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுனால எங்க வாழ்வாதாரம் பாதிப்படையும்..! இதற்கு அனுமதி குடுங்க… முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு..!!

திண்டுக்கல்லில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி சலூன் கடைகள் நேற்று மாநிலம் முழுவதும் மூடப்பட்டன. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்க கோரி மனு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் உள்ளோம்”… கிராமிய கலைஞர்கள்… மாவட்ட ஆட்சியருக்கு மனு..!!

சிவகங்கை கிராமிய கலைஞர்கள் தப்பாட்டம் அடித்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி சிவகங்கை மாவட்ட கழுகோர்கடை கிராமிய தப்பாட்டக் குழு சங்கத்தின் சார்பில் தப்பாட்ட கலைஞர்கள் 20 பேர் தப்பாட்டம் இசைத்து, ஆட்டம் ஆடி வந்தனர். அதன்பின் தங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியை சந்தித்து கொடுத்தனர். அந்த […]

Categories
மாநில செய்திகள்

தேவேந்திர குல வேளாளர்… மனு தள்ளுபடி… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தேவேந்திரகுல வேளாளர் சட்டத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேவேந்திரகுல வேளாளர் சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் மனுக்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சட்டத் திருத்தத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் தந்து விட்டதால் தற்போதைய நிலையில் வழக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்துள்ளது. மேலும் தமிழக எம்.பிக்கள் அவையில் இல்லாத நிலையில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது எங்கள இழிவுபடுத்துற மாதிரி இருக்கு..! பகிரங்க மன்னிப்பு கேட்கணும்… மாவட்ட ஆட்சியருக்கு பரபரப்பு மனு..!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் மருத்துவர் சமூக நல சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். அதன் பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மண்டேலா திரைப்படத்தை தடை செய்யக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் முடிதிருத்தும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களோட வாழ்வாதாரமே போச்சு…! இதுக்கு அனுமதி குடுங்க… நாடக கலைஞர்கள் மனு..!!

திண்டுக்கல் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நாடக கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி மனு கொடுத்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பழனி தாலுகா பகுதியை சேர்ந்த நாடக கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது அவர்கள் காளியம்மன், விநாயகர், கருப்பசாமி ஆகிய உள்ளிட்ட தெய்வங்களின் வேடம் அணிந்து இருந்தனர். மேளதாளம் முழங்க அங்கிருந்து ஊர்வலமாக சென்று உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் 600-க்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்… எங்களுக்கு அனுமதி குடுங்க… மாவட்ட ஆட்சியருக்கு மனு..!!

இரவு நேர நிகழ்ச்சிகள் கோவில் திருவிழாக்களில் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் காளி வேடம் அணிந்து வந்து மனு கொடுத்தனர். அனைத்து நாட்டுப்புற, நாடக கலைஞர்கள் சிவகங்கை மாவட்ட நாட்டுப்புற இசை கலைஞர்கள் சங்க தலைவர் ஆல்பர்ட்ராஜ் தலைமையில் நூதன முறையில் காளி வேடம் அணிந்து நாதஸ்வரம், தவில் இசைத்து ஆட்டம் ஆடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது;- […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை ஒரே ஜாதியா மாற்றி குடுங்க… கலெக்டர் அலுவலகத்திற்கு… சமூகநீதி பேரவையினர் மனு..!!

பெரம்பலூரில் மக்கள் சமூகநீதி பேரவை அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட மக்கள் சமூக நீதிப்பேரவை அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க புறப்பட்டனர். இந்த அமைப்பிற்கு பேரவை செயலாளர் நல்லுசாமி தலைமை வகித்தார். மாநில இணைச் செயலாளர் சிவமணி, மாநில இணைச் செயலாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக பெரம்பலூர் பழைய பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரின் கடிதம் எனக்கு வேனும்… பேரறிவாளன் மனு…!!!

தமிழக முதல்வர் பழனிசாமி 7 பேர் விடுதலை வலியுறுத்தி ஆளுநருக்கு எழுதிய கடிதத்தின் நகலை கேட்டு பேரறிவாளன் மனு அளித்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி தமிழக முதல்வர் பழனிசாமி ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் ஆளுநர் அந்த மனுவை நிராகரித்து விட்டார். இந்நிலையில் கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே… இது ரொம்ப நல்லா இருக்கே… என்ன ஒரு தைரியம்…!!!

திமுக பிரமுகர் அபகரித்த சொத்தை மீட்டுத்தரக் கோரி திமுக தலைவர் ஸ்டாலின் இடமே மனு கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை வழக்கு…! தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!

நெல்லையிலிருந்து தென்காசி வரை  நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக தொடரப்பட்ட வழக்கில் நெடுஞ்சாலை துறை செயலர் பதில் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜசேகர பாண்டியன். இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நான்கு வழிச்சாலை அமைப்பது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நெல்லையிலிருந்து தென்காசி வரை சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்தத் திட்டத்திற்காக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரேஷன் அட்டை வேண்டாம்… கலெக்டரிடம் ஒப்படைக்க வந்த மக்கள்… அலுவலகத்தில் பரபரப்பு…

ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளை வேண்டாம் என்று ஒப்படைக்க வந்த மக்களால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அரச்சலூர் அருகே உள்ள உள்ள குள்ளரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என். ஆர். வடிவேலு தலைமையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை தருவதற்காக திடீரென நேற்று வந்தனர். போலீசாரின் சமாதானத்தின் பெயரிலும் அவர்கள் அமைதி ஆகவில்லை. கலெக்டரை சந்தித்து தாங்கள் இந்த மனுவை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்… தூத்துக்குடியில் சரக்கு பெட்டக முனையம்… மத்திய மந்திரியிடம் கனிமொழி மனு…!!!

தூத்துக்குடி துறைமுகத்தில் மீன்பிடி இறங்கு தளங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும் என மத்திய மந்திரியை நேரில் சந்தித்து கனிமொழி கோரிக்கை மனு வழங்கியுள்ளார். டெல்லியில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரியை திமுக எம்பி கனிமொழி நேற்று நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில், “தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்கு பெட்டக பரிமாற்றம் முனையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை விரைவில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஊராட்சிகளுக்கு உடனடியாக நிதி வழங்க ஊராட்சித் தலைவர்கள் மனு..!!

கிராமங்களுக்கு ஒதுக்கப்படாத நிதியை உடனடியாக வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம்  ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என பல ஒன்றியங்களில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் மூக்கா ரெட்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 19 பஞ்சாயத்து ஊராட்சிகளுக்கு இதுவரை ஒதுக்கப்படாத நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி தலைவர்கள் மனு அளித்தனர்.

Categories
மாநில செய்திகள்

ஆறு மாசம் சம்பளம் இல்ல… “உடல் உறுப்பை விற்க அனுமதி வேணும்”… மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நபர்…!!

குடும்ப வறுமை காரணமாக தனது உடல் உறுப்பை விற்பனை செய்ய அனுமதி தாருங்கள் என போக்குவரத்து ஊழியர் ஒருவர் மனு கொடுத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தத்தின் பேரில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தமிழ்ச்செல்வம் தனது குடும்ப வறுமை காரணமாக உடல்  உறுப்பை விற்க அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். சென்ற 6 மாத காலமாக சம்பளம் கொடுக்காததால், பல சிரமங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு ரத்து செய்ய கோரி மனு… நிராகரித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு…!!!

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்து, தேர்வுகளை ஒத்தி வைக்க […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி தேர்வு ரத்து…? ஹால்டிக்கட் இருந்தா பாஸ் பண்ணுங்க…. உயர்நீதிமன்றத்தில் மனு….!!

கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் மூடப்பட்டிருப்பதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ஒரு புறம் வகுப்புகள் நடைபெற்று வர, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு வைக்கலாமா […]

Categories
மாநில செய்திகள்

விமானங்களை தமிழகத்தில் தரையிறக்க கோரிய திமுக வழக்கு… பதில்தர அவகாசம் கேட்டது தமிழக அரசு!

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழகத்திற்கு கூடுதல் விமானங்களை இயக்க மத்திய அரசுக்கு அனுமதி கோரிய நிலையில், இது குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தர இன்று கெடு விதித்த நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு ஜூலை 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு விவரம் திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் கடந்த 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களை தமிழக விமான நிலையங்களில் தரையிறக்கணும்… திமுக மனு!!

வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் விமானங்களை தரையிறங்க அனுமதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுள்ளனர். நாளை இது தொடர்பாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், ஏராளமான தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நேரத்தில் சர்வீஸ் செண்டர், வீட்டு உபயோக விற்பனை கடைகள் திறக்க வாய்ப்புள்ளதா? : ஐகோர்ட் கேள்வி!

வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும், சர்வீஸ் செண்டர்களையும் திறக்க வாய்ப்புள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சர்வீஸ் சென்டர்களை திறப்பது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருள் விற்பனையங்கங்களையம், சர்வீஸ் சென்டர்களையும் திறக்க கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்று 36வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதை […]

Categories
உலக செய்திகள்

தம்மை நாடு கடத்துவதை எதிர்த்து விஜய்மல்லையா தொடர்ந்த மனு: தள்ளுபடி செய்தது லண்டன் நீதிமன்றம்!

தம்மை இந்தியாவுக்கு அனுப்புவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விஜய் மல்லையா மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜய்மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடந்தும் நடவடிக்கைக்கு எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்திய வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த 2016ம் ஆண்டு தப்பி சென்றார். அவரை நாடு கடத்த உத்தரவிடக்கோரி லண்டன் வெஸ்ட்மின்ஸ்ட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ சேவைக்காக, மூடப்பட்ட கர்நாடக-கேரள எல்லையை திறக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்.பி மனு

கர்நாடக கேரள எல்லையை திறந்துவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள எம்பி சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 144 தடை அமல்படுத்தப்பட்டு இன்று 6வது நாளாக நடைமுறையில் இருக்கிறது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் எல்லை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் […]

Categories

Tech |