அமெரிக்காவில் அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 39 பேர் மாயமான சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமி பகுதியில் கடலோர காவல் படையினர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஒரு படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. இதனை பார்த்த, காவல்படையினர் உடனடியாக அங்கு சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு நபரை மீட்டனர். இது பற்றி அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. […]
